இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அடுத்ததாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சிக்கியுள்ளது. ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் பும்ரா தான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டது.
சுப்மன் கில்லிடம் இருக்கும் இந்த தகுதி போதும் : பார்த்திவ் பட்டேல்
ஆனால் அவரது பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுக்க வேண்டி வரும் என்பதனால் அவரை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்பவில்லை. ஒருமுறை கேப்டனை நியமித்தால் அது நீண்ட காலம் வரும்படி நீண்ட எதிர்காலம் கொண்ட கேப்டனை நியமிக்கவே நிர்வாகம் விரும்புகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனுக்கான போட்டியில் சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், ஜடேஜா என பல்வேறு வீரர்கள் வரிசையில் இருந்தாலும் சுப்மன் கில் தான் முன்னிலை இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வரும் அவர் 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று அசத்தலான கேப்டன்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
அதனால் குஜராத் அணியும் தற்போது புள்ளி பட்டியலில் மிக வலுவான நிலையில் உள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்று ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றால் கூட அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும். இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வருவதற்கு சுப்மன் கில்லிடம் அனைத்து தகுதிகளும் உள்ளதாக முன்னாள் இந்திய வீரரான பார்த்திவ் பட்டேல் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில் ஒரு அற்புதமான வீரர் எப்போதுமே அவர் இடம் பெற்றிருக்கும் அணியில் உள்ள வீரர்களை உற்சாகமாகவும், உத்வேகத்துடனும் வைத்திருப்பார். தொடர்ச்சியாக ரன் குவிக்கும் திறன் கொண்ட அவர் தற்போது குஜராத் அணிக்காக அதிகளவில் ரன்களை குவித்து வருகிறார். அதுமட்டும் இன்றி இளம் வீரர்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்.
இதையும் படிங்க : விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த செயல்.. நெகிழ்ந்து போன லக்னோ அணியின் ஓனர் – விவரம் இதோ
இப்படி வளரும் வீரர்களுடன் அதிக நேரத்தை செலவிடும் ஒரு கேப்டன் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இளமையும், அனுபவமும் கலந்த சுப்மன் கில் அதிக நேரத்தை வீரர்களுடனே செலவு செய்யும் தன்மை கொண்டவர். இந்த ஒரு திறன் போதும் அவர் இந்திய அணியின் சிறப்பான கேப்டனாக மாறுவார் என பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



