இந்திய ஜெர்ஸியை போட்டதும் அவர் நாட்டுக்காக எப்படி மேஜிக் பண்றாருன்னு பாருங்க.. பார்திவ் படேல் உறுதி

Parthiv Patel 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. குறிப்பாக ஐபிஎல் ஃபைனலில் இந்தியாவுக்காக தேர்வான யாருமே விளையாடாததால் 15 வீரர்களும் முன்னதாகவே அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர்.

முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியின் இந்த தோல்விகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக அமைந்தார். ஏனெனில் 14 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் வெறும் 216 ரன்கள் 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

- Advertisement -

இந்தியாவுக்காக மேஜிக்:
அத்துடன் கேப்டனாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் சொதப்பிய அவர் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டாலும் தேசத்தின் நீல நிற ஜெர்சியை அணிந்ததும் இந்தியாவுக்காக ஹர்திக் பாண்டியா அற்புதங்களை நிகழ்த்துவார் என்று முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் நம்பிக்கையும் ஆதரவும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கண்டிப்பாக ஒருமுறை இந்திய அணியின் ஜெர்சியை அணிந்ததும் அவர் முற்றிலும் வித்தியாசமான வீரராக மாறி விடுவார். இந்த ஐபிஎல் சீசனில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் இந்திய அணிக்கு முக்கியமானவர். வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவரால் வெஸ்ட் இண்டீஸில் உள்ள சிறிய மைதானங்களில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியும்”

- Advertisement -

“எனவே டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வேலையை செய்வார்” என்று கூறினார். இருப்பினும் சமீப காலங்களாகவே இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை முற்றிலுமாக நிறுத்திய பாண்டியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் அடிக்கடி காயத்தை சந்தித்து வெளியேறுவதை வழக்குமாக அமைத்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் மட்டும் அவர் முழுமையாக விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்திய ஜெர்ஸியை போட்டதும் அவர் நாட்டுக்காக எப்படி மேஜிக் பண்றாருன்னு.. பார்திவ் படேல் உறுதி

அதனால் பாண்டியா என்றாலே பணத்துக்காக ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடுவார் ஆனால் நாட்டுக்காக காயமடைந்து வெளியேறுவார் என்று ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கமாகும். ஆனால் இம்முறை பாண்டியா நாட்டுக்காக டி20 உலகக் கோப்பையில் அசத்துவார் என்று பார்த்தீவ் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதே கருத்தை மற்றொரு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement