வளவளன்னு பேசுவது தோனியின் ஸ்டைல் இல்ல அவரோட மீட்டிங் இத்தனை நிமிஷம் தான் பார்த்தீவ் பட்டேல் பகிர்ந்த தகவல்

Dhoni parthiv patel
- Advertisement -

தோனி இந்திய அணிக்கு வந்ததில் இடத்தை இழந்தவர்களில் ஒருவர் பார்த்திவ் படேல். தோனியின் அபார ஆட்டத்தால் அவரது பல சாதனைகளாலும் இந்திய அணியில் இடம் இல்லாமல் பல வீரர்கள் இருந்தனர். தினேஷ் கார்த்திக் பட்டியல் பார்த்திவ் படேல் விருத்திமான் சஹா என பலர் இருந்தனர்.

Dhoni

- Advertisement -

அவர்களில் பார்த்திவ் படேல் தற்போது மகேந்திர சிங் தோனி பற்றி பேசியுள்ளார். சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்கள் தோனியை பற்றி பேசுவது அதிகமாகிவிட்டது. வீரர்கள் ஊரடங்கு நிலையில் இருப்பதால் எப்படியாவது தோனியை பற்றி தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒன்றைக் கூறி விடுகின்றனர். இந்நிலையில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய பார்த்தீவ் பட்டேல் தோனியின் கேப்டன்சிப் ஸ்டைலைப் பற்றி பேசியுள்ளார்.

அவருடனான அனுபவங்கள் குறித்து நேரலையில் பேசிக்கொண்டிருந்த அவர் கூறியதாவது… தோனி எப்போதும் அணி வீரர்கள் கூட்டத்தை பெரிதாக நடத்த மாட்டார். கடைசி இரண்டு நிமிடங்களில் தான் அது நடக்கும். 2008 ஐபிஎல் இறுதிப் போட்டியின் போதும் கூட இரண்டு நிமிடத்தில் தான் அணி வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அதேபோல் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் கூட்டத்தையும் அப்படித்தான் நடத்தியிருப்பார் என்று கூறுகிறேன்.

parthiv

அவருக்கு நன்றாக தெரியும் எந்த வீரர்களிடமிருந்து எந்த திறனை எதிர்பார்க்க வேண்டும் என்று. இதனால் தான் அவ்வாறு பெரிதாக கண்டு கொள்ளாமல் இருக்கிறார். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பார்த்திவ் படேல் 13 போட்டிகளில் விளையாடி 302 ரன்கள் குவித்தார். 2010ஆம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி அவர் அதன் பின்னர் கொச்சி டஸ்கேர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிட்டத்தட்ட ஆறு அணிகளுக்காக விளையாடி விட்டார்.

Advertisement