நான் அணியில் 4 ஆவது வீரராக விளையாட விரும்புகிறேன். அதற்கு காரணம் இதுதான் – பண்ட் விளக்கம்

Pant
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

Pant

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் பண்ட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது :இந்த தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் நான்காவது வீரராக களமிறங்க ஆசைப்படுகிறேன். ஏனெனில் அந்த இடத்தில் நான் பல போட்டிகளில் டெல்லி அணிக்காக இறங்கி விளையாடி உள்ளேன். மேலும் முதல்தர கிரிக்கெட்டில் நான் நான்காவது இடத்தில் நன்றாகவே ஆடிவந்த வந்துள்ளேன். எனவே அந்த வரிசையில் ஆடுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல மேலும் நான் நான்காவதாக பேட்டிங் செய்ய விரும்புகிறேன்.

Pant

எனது ஆட்டம் அதிரடியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் நான் எப்போதும் சூழலுக்கு ஏற்றவாறு தான் ஆடுவேன். அதனால் என்னுடைய இயல்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்த உள்ளேன் மேலும் தோனியின் இடத்தை நிரப்புவது மிக கடினமான காரியம். அவருடைய இடத்தில் நான் விளையாடப் போகிறேன் என்பது எனக்கு ஒரு மிகப்பெரும் சவால்.

Rishab Pant

அவர் உலக கோப்பை தொடரின் போது எனக்கு அளித்த அறிவுரைகள் என் மனதில் வைத்துள்ளேன் அவைகளைப் பின்பற்றி என்னால் இந்த தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கிறன் என்று பண்ட் கூறினார்.

Advertisement