என்னது நான் அவருக்கு இணையான வீரரா ? ப்ளீஸ் யாரோடும் ஒப்பிட வேண்டாம் – வெளிப்படையாக பேசிய பண்ட்

Pant
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. முக்கிய வீரர்கள் பலர் இல்லாமல் நடைபெற்ற இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி வரலாற்றில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

pant

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அதுமட்டுமில்லாது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த மகேந்திர சிங் தோனியின் சாதனையையும் அவர் முறியடித்து இருந்தார். எனவே அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து தெரிவித்து வருவதோடு மட்டுமின்றி தோனியுடன் அவரை ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

- Advertisement -

தோனியுடன் அவரை ஒப்பிட்டுப் பேசுவதே இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பண்ட் அதிரடியாக விளையாடும் போதெல்லாம் தோனியுடன் இணைத்து பலரும் பேசுவது வழக்கம் இந்நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பண்ட் தற்போது பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pant

தோனி போன்ற ஒரு வீரருடன் என்னை ஒப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் முறை எனக்கு பிடிக்காது. நான் நானாக இருக்க விரும்புகிறேன். இந்திய அணியில் எனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க ஆசைப்படுகிறேன். தலைசிறந்த வீரர்களுடன் இளம் வீரர்களை ஒப்பிட்டு பார்ப்பது சரியானது கிடையாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் எனது பங்களிப்பு சிறப்பாக இருந்ததை நினைத்து பெருமை அடைகிறேன்.

Pant

ஒரு அணியாக நாங்கள் அற்புதமாக விளையாடினோம். இது ஒரு மாபெரும் வெற்றி நாங்கள் விளையாடிய விதத்திற்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டுகளை தருவது ஒரு அற்புதமான உணர்வு என்று பண்ட் கூறினார்.

Advertisement