தோனியின் வீட்டிற்கு நேராக சென்ற பண்ட். காரணம் இதுதானாம் – இணையத்தை கலக்கும் புகைப்படம்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் வீரரான ரிஷப் பண்ட் தோனியின் வீட்டிற்கு சென்று அவருடன் அமர்ந்து உரையாடிய நிகழ்வுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

பண்ட் அங்கு செல்ல என்ன காரணம் என்ன என்று பல ரசிகர்களும் யோசித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பண்ட் எதற்காக அங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காகவும் பண்ட் அங்கு தோனியின் வீட்டுக்கு செல்லவில்லை. கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது ஒரு நாள் விடுமுறை இருந்த காரணத்தினால் வீரர்கள் ராஞ்சி நகரைச் சுற்றி வந்தனர்.

அப்போது பண்ட் அவரின் ஆசைக்காக தோனியின் வீட்டிற்கு தானாக விரும்பி சென்று தோனியுடன் நேரத்தைக் செலவிட்டதாகவும் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement