இவர் அணியில் இருந்திருந்தால் சென்னை போட்டியில் ஜெயித்திருப்போம் – பண்ட் பேட்டி

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி 15 ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணி 50 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை குவித்தது.

இந்திய அணியின் இந்த ரன்குவிப்பிற்கு முக்கிய காரணமாக பண்ட் 69 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அசத்தினார். இது அவருடைய முதலாவது சர்வதேச ஒருநாள் அரைசதமாக அமைந்தது மேலும் கடந்த பல தொடர்களாகவே மோசமான பேட்டிங்கால் விமர்சிக்கப்பட்டு வந்த பண்டின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த போட்டியில் அவரது ஆட்டம் அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த அவர் கூறியதாவது : நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். ஆனால் கடந்த பல போட்டிகளாக அது முடியாமல் போனது. தற்போது நான் அதிலிருந்து கற்ற பாடத்தினால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எனது பேட்டிங்கை மாற்றி வருகிறேன். இனி வரும் போட்டிகளில் நான் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்.

Pant 1

மேலும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பண்ட் அதன்பிறகு இந்த போட்டியில் பும்ரா காயம் காரணமாக விளையாடாதது பின்னடைவாக அமைந்தது. அவரின் திறமை நாம் அறிந்ததே அவர் இருந்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். அதேபோன்று இந்த போட்டியில் பந்துவீச்சளர்கள் சிறப்பாக செய்லபடவில்லை என்று கூறவில்லை.

Jasprit Bumrah

முன்னணி பந்துவீச்சாளர்கள் காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையில் தற்போதைய பந்துவீச்சு தடுமாறுகிறது. அவர்களின் பந்துவீச்சில் இருக்கும் குறைகளை கணித்து முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். வரும் போட்டிகளில் நிச்சயம் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என்று பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement