தோனியை போன்று சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்ற பண்ட் – வைரலாகும் வீடியோ

Pant-2

இந்தியா இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்தி தொடரை சமன் செய்தது.

இந்த போட்டியில் வங்கதேச அணி முதலில் ஆடும்போது சாஹல் ஓவரில் ஈஸியான ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்ட பண்ட் அதன்பிறகு ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார் என்றே கூறலாம். அதிலும் வங்கதேச அணியின் முதல் விக்கெட்டாக அந்த அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸை பண்ட் ரன் அவுட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி 7 ஆவது ஓவரின் 2 பந்தில் லிட்டன் தாஸ் பந்தை தடுத்துவிட்டு பந்து எங்கு போனது என்று தெரியாமல் ஒரு ரன் ஓட ஆசைப்பட்டார். அதனை கவனித்த பண்ட் அந்த பந்தை விரட்டி சென்று எடுத்து அவர் கிரீஸுக்கு திரும்பும்முன் த்ரோ செய்து ரன் அவுட் செய்தார். முதலில் எல்.பி கேட்ட பண்ட் பிறகு அதே பந்தில் பேட்ஸ்மேனை ரன்அவுட் செய்தது நேற்று மைதானத்தில் இருந்த ரசிகர்களையும் ஆச்சரியப்படவைத்தது.

மேலும் தொடர்ச்சியாக கீப்பிங்கில் சொதப்பி வரும் பண்ட் நேற்றைய போட்டியில் முதல் பாதியில் சொதப்பினாலும் பிறகு தோனியை போன்று சற்று சயோகித புத்தியுடன் செயல்பட்டு ஸ்டம்பிங், ரன்அவுட் என சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.