கிறிஸ்துமஸ் பண்டிகையை தோனியுடன் கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்ட பண்ட் – வைரலாகும் புகைப்படம்

தோனிக்கு அடுத்து புதிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இந்திய அணி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் அதிக அனுபவம் இல்லாதவர் என்றாலும் ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்த பண்டின் மீது நம்பிக்கை வைத்து அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அறிமுகம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அவர் விக்கெட் கீப்பிங் படு மோசமாக இருந்து வருகிறது.

Pant

பேட்டிங்கில் ஓரளவு சாதித்தாலும் கீப்பிங் இவரின் செயல்பட்டு மிக மோசமாகவே இருக்கிறது. மேலும் பேட்டிங்கில் சொதப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் அது அணியை கடுமையாக பாதிக்க வில்லை. ஆனால் கீப்பிங்கில் அவர் பந்தினை கையில் பிடிப்பதே இல்லை மேலும் பல கேட்சிகளை அவர் தவற விடுகிறார் இது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரிஷப் பண்ட் இதேபோன்று தொடர்ந்து சொதப்பும்போது ரசிகர்கள் தோனி தோனி என்று முழக்கமிட்டு அவரை கிண்டல் அடிக்கின்றனர்.

மேலும் அவர் தனக்கான தனித்துவமான அடையாளத்தை பெற்று தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையை அவர்மீது வைத்து அதற்காகவே அவருக்கு இந்திய நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவர் கீப்பிங்கில் மந்தமாகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அடுத்த இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் தேர்வாகியுள்ள பண்ட் தற்போது நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை தோனியுடன் கொண்டாடி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் தோனியுடன் பண்ட் மாற்று மேலும் 2 நண்பர்கள் இந்த புகைப்படத்தில் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -