துபாய் சென்று தோனியுடன் வீடியோ வெளியிட்ட பண்ட் – கருத்து சொன்ன ரசிகர்கள்

Pant-1

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஆரம்பத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு தொடர்களுக்குமான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணி தேர்வுகளிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பராக பண்ட் அணியில் தொடர்கிறார். இந்நிலையில் தோனி தற்போது துபாயில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார். அதன்படி நேற்று வெளியான புகைப்படத்தில் பண்ட் மற்றும் தோனி ஆகியோர் இணைந்து அவரது நண்பர்களுடன் துபாயில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது பண்ட் தோனியுடன் எடுத்த கிறிஸ்மஸ் கொண்டாட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பண்ட் ஆட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வரும் நிலையில் அவரை தோனி துபாய் அழைத்துச் சென்றது எதற்காக ? என்று தெரியவில்லை. மேலும் பண்ட்டின் மனநிலையை சமன்படுத்தி அவருக்கு ஆலோசனை வழங்கவும், அவரது விக்கெட் கீப்பிங் திறனை மேம்படுத்தும் யோசனைகளை வழங்குவதற்காகவும் அவரை தனியாக அழைத்துச் சென்று இருக்கிறாரோ ? என்றும் தெரியவில்லை.

இருப்பினும் அவர்கள் இருவரும் துபாய் சென்று கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் மட்டும் போதாது அவரைப் போன்றே விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் பண்டின் இந்த பதிவிற்கு கமெண்டுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -