காதலியுடன் வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடிய பண்ட் – வைரலாகும் புகைப்படம்

Pant
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆன பண்ட் தோனிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அறிமுக தொடர்களில் சிறப்பாக ஆடிய பண்ட் அதன்பிறகு தனது பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்பி வருகிறார். அட்டகாசமாக ஆரம்பித்த கரியர் கடந்த 2019 ஆம் ஆண்டு சற்று சோகமாகவே சென்றது என கூறலாம்.

Pant-4

- Advertisement -

மேலும் பலரும் தற்போது பண்டின் சொதப்பலான ஆட்டத்திற்கு எதிராக விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன இருந்தாலும் அணியின் எதிர்காலம் குறித்தும் பண்டின் முன்னேற்றம் குறித்தும் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதன் காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது 5ஆம் தேதி நாளை மறுதினம் துவங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் பண்ட் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தை அவருடைய காதலி இஷா நெகி என்பவருடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார் பண்ட்.

 

View this post on Instagram

 

I like me better when I’m with you 🧡🤷🏻‍♂

A post shared by Rishabh Pant (@rishabpant) on

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஷா நெகி உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உன்னுடன் இருக்கும் பொழுது தான் நான் நன்றாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement