ரோஹித்துக்கு தனியாக இருக்கும் ஆதரவாளர்கள் இவர்கள்தான் – போட்டோவால் வெடித்த சர்ச்சை

Rohith-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.

Kohli

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக இந்திய அணியினர் புளோரிடாவின் மியாமி நகருக்கு சென்றடைந்தனர். உலக கோப்பை தொடர் முடிந்ததிலிருந்து கேப்டன் கோலி மற்றும் ரோஹித் இடையே பிரச்சனை உள்ளதாக கருத்துக்கள் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்கா செல்லும் முன்பு விராட் கோலி எடுத்த புகைப்படத்தில் ரோகித் சர்மா போட்டோ இடம்பெறவில்லை. இதனால் அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது மியாமி நகரில் இந்திய அணி வீரர்கள் வெளியே சுற்றி திரிந்தபோது இளம் வீரரான பண்ட் ஒரு போட்டோவை எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Mellow Vibe ~ Killer Tribe ???????????? #ingoodcompany #miami

A post shared by Rishabh Pant (@rishabpant) on

அதில் இந்திய அணியின் வீரர்களான புவனேஷ்வர்குமார், தவான், ரோகித், ஐயர் மற்றும் பண்ட் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரத்தில் வைரலானது. மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் எங்கே கோலி என்று கமெண்ட் செய்தனர். மேலும் ரோஹித்தின் ஆதரவாளர்கள் இந்திய அணியில் இவர்கள்தான் என்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக இந்திய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Kohli

இதனால் இந்த போட்டோ சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. அணியில் ஏற்கனவே பிளவு இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் ரோகித் இருக்கும் இந்த புகைப்படம் பிளவை வெளிக்காட்டும் விதமாக உள்ளது என்றும் கருத்துகளை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement