இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது இதுவரை முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 55 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை குவித்துள்ளது. பண்ட் 10 ரன்களுடனும், ரஹானே 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். துவக்க வீரராக அகர்வால் மட்டும் சற்று நிதானமாக விளையாடி 34 ரன்கள் குவித்தார்.
மற்றபடி அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் கோலி 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். விஹாரி 7 ரன்களிலும், துவக்க வீரர் ப்ரித்வி ஷா 16 ரன்களிலும் புஜாரா 11 ரன்களிலும் ஆட்டம் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் கோலி எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது.

ஏனெனில் இந்த தொடரின் முதன்மை விக்கெட் கீப்பராக சஹா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் பண்ட் சேர்க்கப்பட்டது மிகப் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அதேபோல் சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் நேரடியாக அஸ்வினை அவர் தேர்வுசெய்துள்ளார்.



