2 நொடியில் தோனியை அப்படியே கண்முன் கொண்டுவந்த பண்ட். அசத்தல் ஸ்டம்பிங் – வைரல் வீடியோ

Pant-1

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் என்ற இமாலய ரன்குவிப்பின் மூலம் அசத்தியது.

Pant

இந்திய அணி சார்பாக ரோஹித் மற்றும் ராகுல் சதம் விலாச, ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார். அதன்பிறகு 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

கடந்த பல தொடர்களாகவே சொதப்பி வந்த பண்ட் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சென்னை போட்டியில் அசத்திய பண்ட் இந்த போட்டியிலும் 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரி என 39 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட பண்ட் மின்னல் வேக ஸ்டம்பிங் ஒன்றினை செய்து அப்படியே தோனியை கண்முன் கொண்டு வந்தார்.

அதன்படி 33 ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவின் பந்துவீச்சில் 5 ஆவது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஜேசன் ஹோல்டரை தனது அபார ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றி அசத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதே ஓவரில் குல்தீப் யாதவ் சர்வதேச போட்டிகளில் தனது 2 ஆவது ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -