தோனி போன்றே ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கவேண்டும் என்று பயிற்சி எடுத்துவரும் இந்திய அணி வீரர் – வைரலாகும் வீடியோ

helicopter

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனிக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளது நாம் அறிந்ததே. அதே வேளையில் அவருடைய ஹெலிகாப்டர் சிக்சருக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனாவசியமாக அந்த ஷாட்டை அடிப்பதில் பேர் போனவர் தோனி. குறிப்பாக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸரை இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாது என்று கூறினால் அது மிகையல்ல.

Dhoni

அந்த அளவிற்கு தனது தனிச்சிறப்பான ஷாட்டை நேர்த்தியாக விளையாடி வரும் தோனி ஐபிஎல் போட்டிகளிலும் அவ்வப்போது அதனை அடுத்துக் காட்டுகிறார். இந்நிலையில் தற்போது டோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் இளம் வீரரான ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சோபிக்க வில்லை.

ஆனால் எப்போதும் ஐபிஎல் போட்டிகளின்போது சிறப்பாக விளையாடி வரும் பண்ட் இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணியின் சூழலுக்கு ஏற்ப அதிரடியாக களம் இறங்கி ரன்களைக் குவிப்பதில் வல்லவராக இருக்கும் ரிஷப் பண்ட் இந்த ஆட்டமும் தனது அதிரடியை காண்பிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் தற்போது அவர் தோனியை போன்று ஹெலிகாப்டர் ஷாட்டுகளை அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த அதில் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும் சர்வதேச போட்டிகளில் தான் தோனியின் இடத்தை நிரப்ப முடியவில்லை ஐபிஎல் போட்டிகளிலாவது தம்பி சிறப்பாக விளையாடட்டும் என்று ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து அவரை வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.