ஸ்டம்பிங் செய்தும் அவுட் கொடுக்க மறுத்த 3 ஆவது அம்பயர் – காரணம் இதுதான்

Pant-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியுள்ளது. அதன்படி டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

Toss

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி 17 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை அடித்தது. எப்படியும் இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி பெரிய இலக்கினை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் தான் இந்திய அணி தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியிலும் பண்ட்டின் சொதப்பலான கீப்பிங் தொடர்ந்தது என்றே கூறலாம். சாஹல் வீசிய 6 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தில் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு இறங்கி வந்தார். அப்போது பந்தை சிறப்பாக வெளியே தூக்கி போட்டார் சாஹல் அந்த பந்து பேட்ஸ்மேனை ஏமாற்றி கீப்பரின் கைக்கு சென்றது.

Pant

அந்த பந்தை பிடித்த பண்ட் அவரை ஸ்டம்பிங் செய்தார் ஆனாலும் அது அவுட் இல்லை என்று 3 ஆவது அம்பயர் முடிவு செய்து அறிவித்தார். அதன்காரணம் யாதெனில் பந்தை பண்ட் பிடிக்கும் போது அவரது கைகள் ஸ்டம்பிற்கு சற்று முன்னாள் இருந்ததால் ஐ.சி.சி விதிகளின் அடிப்படையில் பண்ட் செய்த அந்த ஸ்டம்பிங் சரியான முறையில் செய்யப்படவில்லை என்று அம்பயர் அவுட் தர மறுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -