அணியில் இருந்து நீக்கப்படும் அழுத்தத்தில் இருந்தும் பண்ட் முதல் டி20யில் செய்ததை கவனித்தீர்களா ? – விவரம் இதோ

Pant

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

Pant

இந்த தொடரின் முதல் போட்டியில் மிகப்பெரிய அழுத்தத்திற்கு இடையே பண்ட் களமிறங்கினார் ஏனெனில் தொடர்ந்து பல தொடர்களாக சரியாக விளையாடாமல் அடிக்கடி சர்ச்சைகளை சந்தித்து வரும் பண்ட் அணியில் இருந்து நீக்கக்கோரி வலுவான எதிர்ப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த தொடரிலும் பண்ட் தேர்வானது சர்ச்சையாக அமைந்தது.

அதனால் அழுத்தத்திற்கு இடையே முதல் போட்டியில் களம் இறங்கினாலும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தனது பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் 9 பந்துகளை சந்தித்த நிலையில் 18 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் இரண்டு சிக்சர்கள் அடங்கும் எனவே அவர் அதிரடி மீது எந்த சந்தேகமும் இல்லை என்று கோலி வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் விளையாடினார்.

pant 1

இருந்தாலும் தவறான ஷாட் தேர்வின் மூலம் அவுட்டாகி வரும் அவர் அதனை சரிசெய்து சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரை தொடர்ந்து அணியில் இருந்து யாரும் நீக்க முடியாத வீரராகவும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் ஐபிஎல் போட்டிகளில் அபாயகரமாக வீரராகக் கருதப்படும் பண்ட் சர்வதேச டி20 போட்டிகளில் சற்று சொதப்பினாலும் அவருக்கான சுதந்திரத்தை அழைத்தால் நிச்சயம் அவர் சாதிப்பார் என்று அணி நிர்வாகமும் நினைக்கின்றனர்.

- Advertisement -

Pant 1

எனவே பண்ட் வரும் தொடர்களில் இடம் பிடிப்பார் என்றும் அவரது அதிரடி ஆட்டம் தொடரும் என்றும் எதிர்பார்க்கலாம். முதல் போட்டியின் மூலம் சற்று நம்பிக்கையை ஏற்படுத்திய பண்ட் இனி அந்த வழியை பின்பற்றி சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.