DC vs RCB : தோனியை போன்று புத்தியை உபயோகித்து அருமையான கேட்ச் ஒன்றினை பிடித்த பண்ட் – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 46 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Pant
- Advertisement -

இன்றைய போட்டியில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய பெங்களூரு துவக்கம் சரியாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரரான கிளாசனை பண்ட் அருமையாக கேட்ச் செய்து வெளியேற்றினார். கிளாசன் அடித்த பந்தினை தோனி போன்று கணித்து துரிதமாக செயல்பட்டு கேட்ச் செய்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஸ்கூப் ஷாட் ஆட நினைத்த கிளாசன் பந்தினை ஸ்கூப் செய்ய அந்த பந்து பேட்டில் பட்டு ஹெல்மட்டில் பட்டு பந்து சற்று உயரே பறந்தது அதனை கண்ட பண்ட் உடனே சென்று பாய்ந்து அந்த பந்தை பிடித்தார். இவரது இந்த கேட்ச்சினை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 46 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

Iyer

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஐயர் 52 ரன்களை அடித்தனர். மேலும், துவக்க வீரர் தவான் 50 ரன்களை அடித்தார்.

அதன்பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement