முடிவுக்கு வந்த பண்டின் கிரிக்கெட். என்ன பண்ணி வச்சிருக்காரு பாருங்க – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஆன ரிஷப் பண்ட் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கீப்பராக தேர்வுக்குழுவினர் ஆதரவால் தேர்வு செய்யப்பட்டார். அறிமுகமான ஆரம்ப டெஸ்ட் தொடர்களில் வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக சதமடித்து விளையாடிய பண்ட் அதனைத் தொடர்ந்து சமீபகாலமாகவே படு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Pant

- Advertisement -

பேட்டிங் மட்டுமின்றி கீப்பிங்கிலும் அவர் கோட்டைவிட தொடங்கியதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதனை தாண்டி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக திடீர் கீப்பிங் வாய்ப்பை பெற்ற ராகுல் சிறப்பாக ஆடி வருவதால் அவரை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக நியூசிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி களமிறக்கியது.

பண்ட் நியூசிலாந்து தொடரில் தேர்வு செய்ப்பட்டாலும் தற்போது பல போட்டிகளாக வெளியிலேயே அமர்ந்துள்ளார். மேலும் டெஸ்ட் அணியிலும் தேர்வாகியுள்ள ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு கிடைக்குமா ? என்று எதிர்பார்த்த நிலையில் விக்கெட் கீப்பராக சகா விளையாட இருப்பதால் அவருக்கு வாய்ப்பு சந்தேகமாகவே இருக்கிறது.

pant

இருப்பினும் அவருக்கு தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அணியில் இடம் கொடுத்து பேட்டிங் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இம்முறையும் தனது வாய்ப்பை கோட்டைவிட்ட ரிஷப் பண்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் சொற்ப ரன்களை அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

Pant 1

பண்டின் இந்த படு சொதப்பலான ஆட்டத்தின் மூலம் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 21ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement