நோ சொன்ன கேப்டன் கோலி. சாமர்த்தியமான முடிவை எடுத்த ரிஷப் பண்ட் – இன்றைய போட்டியி நடந்த சுவாரசியம்

Pant

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தற்போது இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. துவக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் ஓவரின் 5வது பந்தில் முதல் விக்கெட்டை வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா அசத்தினார்.

Kohli

அதன்பிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து வீரர்கள் 42 ஆவது ரன்னில் 2 ஆவது விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த விக்கெட் சாதாரணமாக கிடைக்கவில்லை இந்த விக்கெட் விழுந்ததில் ஒரு சுவாரசியமான விடயம் இருக்கிறது. அந்த சுவாரசியமான விடயம் யாதெனில் போட்டியின் 20 ஆவது ஓவரை இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமத் சிராஜ் வீசினார்.

- Advertisement -

இந்த ஓவரின் 2-வது பந்து பேட்ஸ்மேனின் பேட் மற்றும் பேடின் இடையே வேகமாக சீரிப்பாய விக்கெட் கீப்பர் பண்ட் கேட்ச் பிடித்துவிட்டு அவுட் கேட்டார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். உடனே கேப்டன் கோலி இது நிச்சயம் அவுட் என்று தானே முடிவு செய்து ரிவ்யூ செய்தார். ஆனால் ரீபிளேவில் பந்து பேட்டில் படவில்லை என்றும் மேலும் எல்பிடபிள்யூ ஆகவில்லை என்றும் தெரியவந்தது.

review

அதன் பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் அதே போன்ற ஒரு பந்து சற்று வேகத்துடன் சப்தத்துடன் சென்றது. இம்முறையும் கேட்ச் செய்த ரிஷப் பண்ட் அவுட் என்று அம்பயரிடம் அப்பீல் கேட்டார். ஆனால் மீண்டும் அம்பயர் நாட் அவுட் என்று அறிவித்துவிட்டார். ஏற்கனவே ரிவ்யூ வாய்ப்பை தவற விட்ட கோலி இம்முறையும் தவற விடக்கூடாது என்பதால் யோசித்தபடியே நின்று கொண்டிருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் பந்தில் சத்தம் கேட்டது மட்டுமின்றி பந்து பேட்டில் பட்டு உள்ளது என்று உறுதியாக கேப்டன் கோலியை ரிவ்யூ எடுக்க சொல்லி சமாதானம் செய்தார்.

- Advertisement -

அதன்பிறகு கோலியும் அவரை நம்பி ரிவ்யூ எடுத்தார். முடிவில் பந்து பேட்டில் பட்டு தெளிவாகி விக்கெட்டும் கிடைத்தது. விக்கெட் கிடைத்த அறிவிப்பு வெளியானதும் உடனே இந்திய வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். குறிப்பாக கேப்டன் கோலி ரிஷப் பண்ட்டை கட்டியணைத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement