டி20யில் தோனியின் சாதனையை முறியடித்த பண்ட் – சாதனை விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது.

Ind-vs-Wi

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 58 ரன்கள் குவித்தார். அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 65 ரன்கள் குவித்தார், கோலி 59 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று பண்ட் அடித்த 65 மூலம் தோனியின் சாதனை ஒன்றை அவர் கடந்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த தோனியை தாண்டி தற்போது பண்ட் சாதனை படைத்துள்ளார்.

pant 1

இந்திய விக்கெட் கீப்பராக டி 20 போட்டியில் 56 ரன்கள் இங்கிலாந்துக்கு எதிராக தோனி அடித்திருந்தார். அதனை கடந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பண்ட் 65 ரன்கள் குவித்ததன் மூலம் தோனியின் சாதனையை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement