டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை அசால்டாக ஊதி தள்ளிய ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் மட்டும் எடுத்து இருந்ததால் அவுஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

pant-1

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் புஜாரா 56 ரன்கள், சுப்மன் கில் 91 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் 89 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.

ஏற்கெனவே மெல்போர்ன் மைதானத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது இந்திய அணி. 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

pant

ரிஷப் பண்ட் பிரிஸ்பன் மைதானத்தில் 89 ரன்கள் குவித்ததன் மூலம் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். பண்ட் இந்த சாதனையை வெறும் 27 இன்னிங்சில் செய்துள்ளார். ஆனால் இதற்கு முன்னர் எம்எஸ் தோனி 32 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்து இருந்தார். தற்போது தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் பண்ட்.

Pant

ஏற்கனவே தோனிக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிவரும் பண்ட் கடந்த பல தொடர்களாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினாலும் சரியான நேரத்தில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அவரின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement