ரிஷப் பண்டை தொடர்ந்து மற்றொரு விக்கெட் கீப்பருக்கும் கொரோனா உறுதி – ராகுலுக்கு ஜாலி தான்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இந்தியாவில் இருந்து புறப்படும்போது இருமுறை கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்றும் ஒருவரால் குவாரன்டைனில் இருந்தது.

IND

- Advertisement -

அதன் பிறகு இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியது ஆனால் அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் ஒரு மாத காலம் ஓய்வு இருக்கும் வேளையில் இந்திய வீரர்கள் பயோ பபுளில் இருந்து வெளியே செல்லலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.

அப்படி வெளியே சென்ற வீரர்களில் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் இருவருக்கு உறுதியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண சென்ற ரிஷப் பண்ட்க்கு கொரோனா உறுதியான தொடர்ந்து தற்போது மற்றொரு விக்கெட் கீப்பர் ஆன சகாவிற்கும் கொரோனோ உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

saha

இதன் காரணமாக இவர்கள் இருவரும் விளையாடவில்லை என்றால் விக்கெட் கீப்பர் பணிக்கு ராகுல் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அதே வேளையில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கொரோனா உறுதியானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் வெளியான தகவலின்படி ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில் தற்போது நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த தொடரில் இந்திய அணி கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அபாயம் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement