ஹோட்டல் அறையின் வெளியில் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுக்கும் பண்ட் – வைரல் வீடியோ

Pant

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக தடைபட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்திய வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்யும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவினை ரிஷப் பண்ட் பதிவிட்டுள்ளார். அதில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் பண்ட் ஆகியோர் ஹோட்டல் அறையின் முன்பு பயிற்சி எடுக்கின்றனர்.

ஹோட்டல் அறையில் வெளியில் இருக்கும் சிறிய தாழ்வாரத்தில் குல்தீப் யாதவ் பந்துவீச அதனை ரிஷப் பண்ட் பிடித்து கீப்பிங் பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அணி வீரர்கள் பலரும் அதற்கு கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.