மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்ததும் 2 இந்திய வீரர்களை ஆஸ்பிடலுக்கு அனுப்பிய இந்திய அணி – விவரம் இதோ

jadeja

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் அபார சதத்தினால் 338 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக புஜாரா மற்றும் கில்ஆகியோர் 50 ரன்களை விளாசினார்.

இதன் காரணமாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை அடித்து உள்ளது. லாபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு அவர்களுக்கு ஸ்கேன் செய்யும் விதமாக ஹாஸ்பிடலுக்கு இந்திய அணி நிர்வாகம் அனுப்பி வைத்தது. அதன்படி செய்து கொண்டிருந்தபோது இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் முழங்கையில் அடி வாங்கினார். அதனால் இன்றைய போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை.

pant

அவருக்கு பதிலாக சஹா விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். அதே போன்று மற்றொரு வீரரான ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் விரலில் அடி வாங்கியதால் தற்போது பந்து வீசாமல் அவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதில் மயங்க் அகர்வால் பீல்டிங் செய்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

jadeja 1

ஏற்கனவே இந்த தொடரில் பல இந்திய வீரர்கள் அடிபட்டு வெளியேறி நிலையில் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜாவின் காயம் ரசிகர்களை பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.