இந்தியா 387 ரன்கள் குவிக்க இந்த 2 ஓவர்கள் தான் காரணம் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் என்ற இமாலய ரன்குவிப்பின் மூலம் அசத்தியது.

Ind

- Advertisement -

துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் சதம் அடித்து அருமையானது துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 227 ரன்கள் குவித்து அசத்தியது. ஒருநாள் போட்டிகளில் தனது 3 ஆவது சதத்தை நிறைவு செய்த ராகுல் 104 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் தனது அதிரடியை தொடர்ந்த ரோகித் சர்மா 159 ரன்களுக்கு ஆட்டம் இழக்க கோலி டக் அவுட் ஆகிய ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் பண்ட் மற்றும் ஐயர் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர். பண்ட் 16 பந்துகளில் 39 ரன்களும், ஐயர் 32 பந்துகளில் 53 ரன்களையும் எடுத்தனர் .அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா ஆட்டமிழந்த போது 43.1 ஓவர்களில் இந்திய அணி 292 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு 4 ஓவர்களில் கிட்டத்தட்ட 72 இந்திய அணி அடித்தது.

Iyer

அதற்கு முக்கிய காரணம் பண்ட் மற்றும் ஐயரின் அதிரடி ஆட்டம் தான். அதிலும் குறிப்பாக 46 ஆவது ஓவரில் பண்ட் 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை குவிக்க அதன்பின்னர் 47வது அவரை பிடித்த ஐயர் 4 சிக்சர் ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் 31 ரன்கள் குவித்து அசத்தினர். இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் இந்திய அணி 55 ரன்களை குவித்தது. இந்த இரண்டு ஓவர்களே இந்தியாவின் மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement