இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தோனி அளவிற்கு முடியாது – பண்ட் ஓபன் டாக்

Pant
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

Pant

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் பண்ட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : எனது ஆட்டம் அதிரடியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் நான் எப்போதும் சூழலுக்கு ஏற்றவாறு தான் ஆடுவேன். அதனால் என்னுடைய இயல்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்த உள்ளேன் மேலும் தோனியின் இடத்தை நிரப்புவது மிக கடினமான காரியம். அவருடைய இடத்தில் நான் விளையாடப் போகிறேன் என்பது எனக்கு ஒரு மிகப்பெரும் சவால்.

Pant

இருந்தாலும் அந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தோனியின் அளவிற்கு தற்போது என்னால் முழுமையாக செயல்படவில்லை என்றாலும் இனிவரும் போட்டிகளில் இருந்து கற்றுக்கொண்டு இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். தோனியின் இடத்தை என்னால் முடிந்த அளவிற்கு நிரப்ப அவர் கொடுத்த அறிவுரைகள் படி போட்டியில் சூழலுக்கு ஏற்ப அதனை கணித்து விளையாடுவேன் என்று பண்ட் கூறினார்.

Advertisement