“பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு” முதன்முறையாக வாய் திறந்த – ஹார்திக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா கடந்த ஆண்டு “காபி வித் கரண்” என்ற நிகழ்ச்சிக்கு சக வீரரும் நண்பருமான ராகுலுடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் பெண்களைப் பற்றி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையாக மாறியது. அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

Pandya 1

- Advertisement -

சமூகவலைதளத்தில் இவர்களுக்கு எதிராக பலர் ஆவேசமாக கொந்தளித்ததால் அணி நிர்வாகம் இவர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்தது. சிறிய தடைக்குப் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பி தற்போது இருவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பின்னர்தான் இருவருக்கும் சற்று மோசமான நிலைமை ஏற்பட்டது. அதற்கு நான்தான் காரணம் என்று காபி வித் கரண் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரன் ஜோகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல மாதங்கள் கழித்து தற்போது பாண்டியா “இந்தியா டுடே” பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில் : அந்த எபிசோடுக்கு பிறகு நடந்த அனைத்தும் கட்டுப்பாட்டிலேயே இல்லை. பொதுவாக யாரும் விரும்பாத பாதிப்பை ஏற்படுத்திய இடம் அது. என்ன நடக்கும் என்று கிரிக்கெட் வீரராக எங்களுக்கு தெரியாது.

Pandya

பந்து அவர்களுடைய கோர்ட்டில் இருந்தது அவர்களின் கேள்விக்கு நாங்கள் பதில் அளித்தோம் அது எங்கெங்கோ போகிவிட்டது. நாங்கள் இருக்கவே விரும்பாத மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய விடயமாக அது மாறியது என்று பாண்டியா கூறினார். மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் பொதுநிகழ்ச்சியில் எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

Natasa

சமீபத்தில் பாண்டியா புத்தாண்டு அன்று தனது காதலி நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் பாண்டியா நிச்சயதார்த்தம் செய்தது அவர் குடும்பத்திற்கு தெரியாது என அவரின் தந்தை அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement