துபாய் கடல். நடுக்கடலில் தனி போட். வைர மோதிரம். லிப்லாக் முத்தம். காதலை வெளிப்படுத்திய பாண்டியா

Hardik Pandya Dinesh Karthik
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு தனது காதலியான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அவர்களின் நிச்சயதார்த்தத்தை மோதிரத்துடன் கூடிய புகைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வருகிறது. மேலும் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து அவர்களது உறவினை உறுதி செய்தார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நட்டாஷா நட்டாஷா ஸ்டேன்கோவிக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் பாண்டியா தனக்கு காதல் அழைப்பு விடுத்ததும் ,மேலும் நிச்சயதார்த்த விருப்பத்தையும் ஏற்றுக்கொண்டதை முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

துபாயில் நடைபெற்ற இந்த நிகழ்வு நடுக்கடலில் தனி போட்டில் நடைபெற்று உள்ளது. மேலும் இந்த வீடியோவில் காதலை பகிர்ந்த இருவரும் முத்தமிட்டுக் கொள்வது போலவும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அவர்களின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement