நான் என்ன பண்ணாலும் அவர மாதிரிலா முடியாதுங்க. தோனி குறித்து ஓபனாக பேசிய பாண்டியா – விவரம் இதோ

Hardik-Pandya

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார்.

Pandya

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாண்டியா இந்திய அணிக்கு திரும்பி பினிஷிங் ரோலில் திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். அதே வேளையில் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்டிக் பண்டியா அளித்த பேட்டியில் கூறியதாவது :

இந்திய அணியில் பினிஷிங் ரோலில் தோனியின் இடத்தை என்னால் நிச்சயம் நிரப்ப முடியாது ஆகவே அதைப் பற்றி நான் அதனைப்பற்றி யோசிப்பதே கிடையாது. ஆனால் அந்த சவாலை எதிர்கொண்டு திறம்பட செயல்பட ஆர்வமாக உள்ளேன். நான் எது செய்தாலும் அணியின் வெற்றிக்காக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் மெதுவாகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைப்பேன். ஏனென்றால் கோப்பை அங்கு இருக்கிறது என்று பாண்டியா கூறினார்.

pandya

ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் கோப்பையை வெல்வதுதான் ஒரே இலக்கு அதனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்று ஹர்டிக் பண்டியா பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 50 ஓவர் உலகக் கோப்பை தவறவிட்ட இந்திய அணி இந்த டி20 கோப்பையைத் தவற விடக்கூடாது என்று தீவிரமாக செயல்பட்டு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -