இந்திய அணியின் நலனுக்காக பாண்டியா எடுத்துள்ள முடிவு. டி20 கப் நமக்கு தான் – ஹார்டிக் பாண்டியா பேட்டி

Pandya-5
- Advertisement -

2019ஆம் ஆண்டு முதுகு வலி பிரச்சனையால் அவதிப்பட்ட இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அப்போதே அதற்கான அறுவை சிகிச்சையையும் செய்து கொண்டார். அதற்குப் பிறகு அவரால் சிறப்பாக பந்து வீச முடியாமல்போனாலும், ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அவரை அணியில் வைத்திருந்தார் விராட் கோஹ்லி. ஒரு வழியாக முழு உடல் நலம் தேறி வந்த பாண்டியா, இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி கம்பேக் கொடுத்திருந்தார் என்றாலும் ஒரு நாள் போட்டிகளில் பந்து வீச அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Pandya

அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் ஒரு ஓவர்கூட பந்து வீசாத அவர், தற்போது அளித்துள்ள பேட்டியில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் பந்து வீசுவேன் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டிகளிலேயே நான் பந்து வீச முயற்சி செய்தேன். ஆனால் தற்போது என்னுடைய கவனம் எல்லாம் டி20 உலக கோப்பையின் மேல்தான் உள்ளது. அந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் என்னால் பந்து வீச இயலும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

- Advertisement -

பந்து வீச்சில் நான் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறேன் என்பது முக்கியமான ஒன்றாகும் என்று அவர் கூறியுள்ளார். சமீப நாட்களாக ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி குறித்த விமர்ச்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் அவரால் பந்து வீச முடியவில்லையென்றால், இந்திய அணியானது இன்னொரு வேகப் பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வர வேண்டும். இது இந்திய அணியின் சமநிலையை பாதிக்கும் என்பதால் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அவரை இந்திய அணியில் வைத்திருப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை என்று இதற்கு முன்னராகவே அறிவித்திருந்தது இந்திய தேர்வுக் குழு. இது குறித்து அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர்,

pandya

இந்திய அணியை சமநிலையில் வைத்திருப்பதிருப்பதற்கு எனது பந்துவீச்சு மிக முக்கியமான ஒன்றாகும். எனவே இந்திய அணியை சமநிலையில் வைத்திருப்பதற்காக என்னால் பந்து வீச முடியும் என்பதை முதலில் நான் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், இந்திய அணியில் தான் மீண்டும் விளையாடும்போது 100 சதவீத திறனையும் வெளிப்படுத்துவேன் என்றும் கூறினர். இதுபற்றி அவர் பேசுகையில், இந்திய அணிக்காக நான் விளையாடும்போது எனது திறமையில் 50 சதவீத்ததை வெளிப்படுத்தாமல் 100 சதவீதத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எனது உடல் நிலையை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்காக ஒன்றரை ஆண்டுகளாக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்.

pandya

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசுவேன். அதேபோல் டி20 உலக கோப்பையிலும் எனது சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்காக வெளிப்படுத்துவேன் என்றும் அந்த பேட்டியில் பேசிய அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான இந்திய அணியை இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறது இந்திய தேர்வுக் குழு. இந்த அணியில் ஹர்தீக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டரக இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement