நியூசி அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியுடன் இணைய இருக்கும் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

pandya

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நாளை மறுதினம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் உடனடியாக இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது.

ind vs sl

இந்நிலையில் இந்திய அணியின் நியூசிலாந்து தொடருக்காக பயணம் சற்று நீண்ட பயணம் என்பதால் வீரர்களின் தேர்வு அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து தொடரில் ரோகித் சர்மா அணிக்குள் வருவதால் ராகுல் மற்றும் தவான் ஆகியோருடைய நிலை என்ன என்று இன்று தெரியவரும்.

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் கடந்த சில தொடர்கள் ஆகவே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியிருந்த ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியா மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வருகை இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்பதால் நியூசிலாந்து தொடருக்கான அணியில் நிச்சயம் அவர் இடம் பெறுவார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

Pandya

மேலும் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் தான் இழந்த இடத்தை மீண்டும் மூன்றாவது துவக்க வீரராக பெறவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கடந்த சில தொடர்கள் ஆகவே அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி சிறப்பான பார்மில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் ஷமி ஆகியோருடன் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளராக சைனி இடம் பெறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -