தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பும் 3 நட்சத்திர வீரர்கள் – ரசிகர்கள் ஹேப்பி

Ind
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்து திரும்பியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் டி20 போட்டிகளை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இழந்தது. இதனால் தற்போது இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Williamson-1

- Advertisement -

அதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வரும் 12ம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோத உள்ளது. இந்த தொடருக்கான அணியில் மூன்று முக்கிய வீரர்கள் திரும்பும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

அதன்படி கடந்த பல மாதங்களாக முதுகுவலி காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்த பாண்டியா தற்போது உள்ளூர் டி20 போட்டியில் அசத்தி கொண்டிருப்பதால் அவர் நிச்சயம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pandya

மேலும் பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் கணுக்கால் காயம் காரணமாக அவ்வப்போது அவதிப்பட்டு வந்ததால் அணியில் நிரந்தர இடம் இன்றி தவித்து வந்தார். இந்நிலையில் அவரது காயமும் குணமடைந்து இருப்பதால் அவரும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு அதிகம் அதிகமாக காணப்படுகிறது.

- Advertisement -

மேலும் ரஞ்சிப் போட்டியில் காலில் அடிவாங்கி தையல் போட்ட ஷிகர் தவானும் தற்போது மீண்டும் தயாராக இருப்பதால் இவர்கள் மூவரும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Bhuvi-1

அதிலும் குறிப்பாக காயத்தில் இருந்து மீண்ட பாண்டியா எவ்வாறு தனது ஆட்டத்தை வெளிப்படுத்த போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது உள்ளூர் டி20 போட்டிகளில் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறார். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் அசுர வேகத்தில் ஆடிவரும் அவர் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement