ஹர்ஷித் ராணா பிரச்சனை விடுங்க.. ஹார்டிக் பாண்டியாவிற்கும் நடந்த கொடுமையை பாத்தீங்களா? – என்ன ஆனது?

Rana-and-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று புனே மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டியில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நடைபெற்று முடிந்துள்ளன.

ஹார்டிக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் :

மேலும் அது குறித்த விவாதங்களும் தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகின்றன. ஏனெனில் நேற்றைய போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், ஆல்ரவுண்டருமான ஷிவம் துபே கன்கஷன் பரிசோதனைக்கு பிறகு இரண்டாம் பாதியில் களமிறங்காமல் வெளியில் அமர்ந்தார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக மாற்றுவீரராக வேறு ஒரு ஆல்ரவுண்டர் களமிறங்குவதை தவிர்த்து முழுநேர வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா களமிறங்கியது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியது. எனவே விதிமுறை மீறி இந்திய அணி இப்படி ஒரு வீரரை களமிறக்கியிருக்க கூடாது என்ற கருத்துக்களும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தையும் தாண்டி நேற்று போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் ஒரு தவறான முடிவு என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இந்திய அணி நேற்று ஒரு கட்டத்தில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஷிவம் துபே மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியை மீட்டெடுத்தனர்.

- Advertisement -

ஷிவம் துபே 34 பந்துகளை சந்தித்து 53 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 30 பந்துகளை சந்தித்து 53 ரன்கள் அடித்திருந்தாலும் ஹார்டிக் பாண்டியாவை விட 4 பந்துகள் அதிகமாக சந்தித்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியா விதிமுறையை மீறல.. ராணா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு.. சந்தேகம்னா அம்பயரிடம் கேளுங்க.. மோர்கெல் பதிலடி

ஏனெனில் ஷிவம் துபேவைவிட பின் வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என 30 பந்தில் 53 ரன்கள் குவித்த பாண்டியா ஒரு ஓவரையும் வீசியிருந்தார். அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கிருக்க வேண்டும் என்பது தான் சரியான முடிவு என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement