இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். சமீபகாலமாகவே முதுகில் செய்துகொண்ட ஆபரேஷனுக்கு பிறகு அவர் பந்து வீசுவது கிடையாது. இருப்பினும் தனது அதிரடியான பேட்டிங்கினால் அசத்திவரும் வரும் பாண்டியா இந்திய அணியின் பினிஷராக உருவெடுத்து வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடர் நாயகன் விருதையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
களத்தில் அதிரடியாக விளையாடும் அவர் அவரது சொந்த வாழ்விலும் பல அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் இந்த வருட ஜனவரி 1 ஆம் ஒன்றாம் தேதி தனது காதலியான நடாஷா என்பவருடன் துபாயில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதன்பிறகு திருமணத்தை வெளியில் சொல்லாத முன்னரே அவர் தந்தையாக இருக்கும் தகவலை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயரிட்ட பாண்டியா அவ்வப்போது அவருடன் விளையாடும் புகைப்படங்களையும் குழந்தைகளை கவனிக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பாண்டியா அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து அவருடைய தற்போதைய சூழலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரில் கலந்துகொண்டு விளையாடிய பின்னர் நாடு திரும்பிய பாண்டியா அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது ஜூலை 30ஆம் தேதி பிறந்த தன் மகனுக்கு ஐந்து மாதம் நிறைவடைந்த வகையில் ஐந்தாவது மாத பிறந்தநாளை புத்தாண்டிடிற்கு முன்னர் கொண்டாடியுள்ளார் பாண்டியா அப்போது அவர் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் மேலும் ” இன்றோடு என் பையன் பிறந்து 5 மாதங்கள் ஆகிறது. நானும் நட்டாஷாவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று பதிவிட்டு அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே பல லட்சம் பேர் லைக் போட்டு இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.