தோனியுடன் புத்தாண்டை கொண்டாடிய பாண்டியா – வைரலாகும் புகைப்படம்

Hardik-Pandya
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று ஆபரேஷன் செய்து அதன் பிறகு தற்போது மீண்டும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஹார்டிக் பாண்டியா கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார்.

dhoni

- Advertisement -

அதன் பிறகு அணியில் இதுவரை காயம் காரணமாக அவரால் இடம்பெற முடியவில்லை. இந்நிலையில் தனது காயம் குறித்து பேசிய பாண்டியா : நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஆபரேஷனுக்குப் பின் செயல்படுவது மிக கடினமான விஷயம்தான். இருப்பினும் அதிலிருந்து மீண்டு வர தேவையான அனைத்து செயல்களையும் நான் செய்து வருகிறேன்.

எந்த வீரர்களும் கட்டுப்படுத்த முடியாத விடயம் காயம் தான் இதை நான் கற்றுக்கொள்ள 4 முதல் 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. எந்த ஒரு வீரரும் காயமடைவதை விரும்பமாட்டார்கள். இதிலிருந்து நான் மீண்டும் வருவேன் என்றும் கூறினார். இந்நிலையில் தோனி கிறிஸ்மஸ் பண்டிகையை பண்ட் கொண்டாடினார். அதன்பின்னர் பின்னர் தற்போது பாண்டியா புத்தாண்டை தோனியுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement