அணியில் இடம்பெறாமல் இருந்தாலும் மைதானத்திற்கு வந்து உற்சாகப்படுத்திய முன்னணி வீரர் – விவரம் இதோ

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது நாளை மறுதினம் சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

Cup

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹார்திக் பாண்டியா அணியில் இடம்பெறவில்லை என்றாலும் மைதானத்திற்கு வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் போட்டியை ரசிப்பதற்காகவும் நேரில் வந்திருந்தார். மேலும் போட்டி முடிந்ததும் இந்திய அணியின் துவக்க வீரரும், தனது நெருங்கிய நண்பருமான ராகுலையும் அவர் பேட்டி கண்டார். இந்தப் பேட்டி இணையத்தில் வைரல் ஆனது.

மேலும் பாண்டியா போட்டியை நேரில் காண வந்த விடயம் ரசிகர்களை கவர்ந்தது. ஏனெனில் காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை முடித்த பாண்டியா தற்போது ஓய்வில் இருந்து மீண்டு சற்று பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் இந்திய அணிக்கு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் போட்டியில் விளையாட வில்லை என்றாலும் வீரர்களை உற்சாகப்படுத்த நேரில் வந்து இருந்த அவரது குணம் ரசிகர்கள் மற்றும் வீரர்களை கவர்ந்தது.

இந்தத் தொடரில் பாண்டியா இடம்பெறவில்லை என்றாலும் வரும் நியூசிலாந்து தொடருக்கான அணித்தேர்வுக்குள் அவர் முழு உடல் தகுதி பெற்றால் நியூசிலாந்து தொடர்பில் இந்திய அணியுடன் இணைவார். மேலும் அவருடன் ஜஸ்பிரித் பும்ரா இணைய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் முன்னணி வீரரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியதால் அவரது இடத்தில் தற்போது ஷிவம் துபே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -