கிண்டல் செய்த சஞ்சய் மஞ்சரேக்கரை கிழித்து தொங்கவிட்ட பாண்டியா ஜடேஜா ஜோடி – இதுக்கு மேல வாய தொறப்பீங்க ?

Manjrekar
- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி சுதாரித்துக் கொண்டு முதலில் பேட்டிஙை தேர்வு செய்தது. இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் இளம் வீரர் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பெரிதாக ரன் சேர்க்க வில்லை. அதன் பின்னர் வந்த விராட் கோலி 78 பந்துகளுக்கு 63 ரன்கள், ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்கள் விளாசினர்.

IND

- Advertisement -

மேலும் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்டியா 7 பவுண்டரிகள் ஒரு சிக்சர் விளாச, ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரி 3 சிக்சருடன் இருந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆட்டம் முடியும்போது 250 ரன்கள் தான் இந்திய அணி சேர்க்கும் என்றும் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய அணியை அடித்து துவம்சம் செய்தனர். 6வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த இருவரும் 6வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் 6-வது விக்கெட் அல்லது அதற்கு பிறகு வந்து ஆடிய ஜோடிகளில் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்து இருக்கின்றனர்.

jadeja 1

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. தங்கராசு நடராஜன் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 75 ரன்கள், கிளன் மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுக்க இறுதியாக 289 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுடானது. இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் சர்ச்சைகளுக்கு பெயர்போன வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் இந்திய அணி தெரிவ குறித்து தனது கருத்தினை தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிடுகையில் : இந்த ஒருநாள் தொடரில் நான் இந்திய அணியை தேர்வு செய்திருந்தால் கண்டிப்பாக ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரை தேர்வு செய்திருக்க மாட்டேன். அவர்களை எந்த இடத்தில் இறக்குவது என்பதும் சந்தேகம் தான். ஆனால் கோலி கட்டாயம் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பளிப்பார் என்று தெரிவித்திருந்தார்.

Jadeja

இப்படி அவர் குறிப்பிட்ட இந்திய வீரர்களை தாக்கி பேசுவது முதல் முறையல்ல. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரின்போதே அவர் ஜடேஜாவை தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் எந்த 2 பேரை வேண்டாம் என்று சொன்னாரோ அவர்கள் இருவரும் 6 விக்கெட்டுக்கு 150 குவித்தது மட்டுமின்றி அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு பெரிய ரன்குவிப்பை அளித்தனர். அவர்களின் இந்த ஆட்டத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் சஞ்சய் மஞ்சரேக்கரை விமர்சனம் செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement