சாமர்த்தியமாக நடந்துகொண்ட மனிஷ் பாண்டே. பாராட்டப்படும் புத்திசாலித்தனம் – விவரம் இதோ

Pandey
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அதிகபட்சமாக அரைசதம் அடித்தனர்.

அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக சைனி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வீரரான மனிஷ் பாண்டேவின் புத்திசாலித்தனமான ஒரு செயல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி இலங்கை அணி வீரரான பெர்னாண்டோ பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பும்ரா பந்துவீச்சில் காலப்பகுதியில் பந்தை புள்டாஸாக வாங்கினார். உடனே பும்ரா அதற்கு எல்பிடபிள்யூ கேட்க ஆரம்பித்தார். ஆனால் அதனை அவுட் இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது பெர்னாண்டோ ரன் ஓட ஆசைப்பட்டு ஓடஆரம்பித்தார். இதனை கவனித்துக்கொண்டிருந்த பாண்டே பந்தை எடுத்து த்ரோ செய்யாமல் போதிய கால அவகாசம் இருக்கிறது என்பதை அறிந்து ஓடிவந்து கையாலே ஸ்டம்பில் இடித்து ரன் அவுட் செய்தார். அவரின் இந்த புத்திசாலித்தனம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் ஒருவேளை அவர் நின்ற இடத்திலிருந்து பாண்டே த்ரோ அடித்திருந்தால் பந்து ஸ்டம்பில் படாமல் போயிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement