பண்டிற்கு பதிலாக இன்றைய போட்டியில் இவரே விளையாடுவார் – வெளியான தகவல்

Pant

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Pant 1

இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பண்ட் ஏற்கனவே விலகியுள்ளார். மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரது தலையில் அடிபட்டது.

அந்த காரணத்தினால் ராகுல் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்தார். தற்போது அவருக்கு பதிலாக இந்த போட்டியிலும் ராகுல் விக்கெட் கீப்பிங்கை தொடர்வார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பண்டிற்கு பதிலாக இந்தப் போட்டியில் ஜாதவ் அல்லது மணிஷ் பாண்டே ஆகியோரை இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Pandey 1

ஜாதவ் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் சில ஓவர்கள் வீசுவார் என்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பண்டின் மருத்துவ அறிக்கை வெளியானால் தான் அடுத்த போட்டியில் அவர் ஆடுவாரா என்பது தெரியவரும்.

- Advertisement -