- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியாவை தொடர்ந்து டி20 உலககோப்பை பைனலில் மோசமான – உலகசாதனையை நிகழ்த்திய பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதியான இன்றுடன் முடிவுக்கு வந்தது. இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தினர். அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 19-வது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை ருசித்தது.

- Advertisement -

இதன்மூலம் இங்கிலாந்து அணியானது ஐ.சி.சி டி20 உலககோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக டி20 கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சினால் பாகிஸ்தான் அணியின் தோல்வி முதல் பாதியிலேயே நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் இந்த போட்டியில் இந்திய அணியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையில் ஒரு மோசமான உலக சாதனையை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான அணி இன்று அடித்த 137 ரன்கள் என்பது பைனலில் அடிக்கப்பட்ட மிகக் குறைந்த ஸ்கோர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

இதற்கு முன்னதாக இந்திய அணி கடந்து 2014-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக வெறும் 130 ரன்களை மட்டுமே குவித்து தோல்வியை சந்தித்திருந்தது. அதுவே இன்றளவும் டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட குறைந்த ஸ்கோராக உள்ளது.

இதையும் படிங்க : உலகத்துல எங்கையாவது இப்படி ஒரு கூத்து நடக்குமா? இந்தியாவின் கோச்சிங் பற்றி பிசிசிஐக்கு கவாஸ்கர் சரியான கேள்வி

இவ்வேளையில் தற்போது இந்திய அணியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி இன்று இந்த டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 137 ரன்களை மட்டுமே குவித்ததன் காரணமாக டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட 2 ஆவது குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by