தோல்வி பயத்தால் சொந்த நாட்டிற்கு செல்லாமல் இங்கிலாந்து புறப்பட்ட 5 பாகிஸ்தான் வீரர்கள் – அடப்பாவமே (விவரம் இதோ)

PAK
- Advertisement -

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் இடம்பெற்றிருந்த பட்டியலில் இடம் பிடித்திருந்தது. இந்தியாவிற்கு அடுத்து இந்த பிரிவில் பெரிய அணியாக பாகிஸ்தான் அணி பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியிலேயே அமெரிக்கா அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

மேலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடமும் தோல்வியை சந்தித்தார்கள். பின்னர் எஞ்சியிருந்த இரண்டு ஆட்டங்களிலும் அவர்கள் வெற்றியடைந்திருந்தாலும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் இந்த தொடரில் இருந்து வெளியேறினர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் மீது தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

அதோடு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற அளவிற்கு பேச்சுக்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் கடைசியாக நடைபெற்று முடிந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பாகிஸ்தாம் அணி நாடு திரும்ப தயாராகிய வேளையில் அனைத்து வீரர்களுமே நேரடியாக பாகிஸ்தான் செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இமாத் வாசிம், அசாம் கான், ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் மற்ற வீரர்களுடன் செல்லாமல் லண்டனுக்கு சுற்றுலா செல்ல போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

ஏனெனில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்திக்க இவர்களும் காரணம் என்பதனால் இவர்கள் மீது அதிகளவு விமர்சனம் எழும் என்பது மட்டுமின்றி அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவையெல்லாம் அவர்களை மனதளவில் பாதிக்கும் என்பதனாலே தற்போதைக்கு பாகிஸ்தான் செல்லாமல் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் சென்று நிலைமையை சமாளிக்கலாம் என்பதற்காகவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 3 ஆவது இடத்தில் களமிறங்கி வெறியாட்டம் ஆடிய நிக்கோலஸ் பூரான்.. கலங்கி நின்ற ஆப்கானிஸ்தான் அணி

இப்படி தோல்வி பயத்தால் நாடு திரும்பாமல் வேறு ஒரு நாட்டிற்கு பாகிஸ்தான் வீரர்கள் சுற்றுலா சென்றுள்ளது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement