- Advertisement -
உலக கிரிக்கெட்

பாக் கிரிக்கெட் வீரர். முஹமது ஹபீஸ் இங்கிலாந்தில் இனி கிரிக்கெட் விளையாட கூடாது – ஆயுட்கால தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான மொஹமது ஹபீஸ் கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 16 வருடங்களாக அந்த அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகள், 218 ஒருநாள் போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் t20 தொடரான விட்டாலிட்டி பிளாஸ்ட டி20 தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த தொடரின் ஒரு போட்டியில் அவரது பந்து வீச்சு மீது சந்தேகமடைந்த நடுவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் கொடுத்தனர்.

- Advertisement -

அவர்களின் புகாரை ஏற்ற கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து அவரது பந்துவீச்சு குறித்த ஆய்வினை மேற்கொண்டது. அதில் விதிமுறைகளுக்கு மீறி தனது கையை 15 டிகிரி அளவிற்கு கூடுதலாக அவர் விரித்து பந்து வீசுவது தெரியவந்துள்ளது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் மீது கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி இனி பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஆன முகமது ஹபீஸ் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் எந்த ஒரு போட்டிகளிளிலும் விளையாடுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று பந்துவீச்சுமுறை சரியாக இல்லை என்பது குறித்த புகார் இவருக்கு புதிதல்ல. பலமுறை இவர் மீது இந்த புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by