- Advertisement -
உலக கிரிக்கெட்

22 வயதில் இளம் வீரர் சேசிங்கில் உலக சாதனை.. தெ.ஆ அணியை கடைசி ஓவரில் வீழ்த்திய பாகிஸ்தான்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. அதை அடுத்து அந்த 2 அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. அந்த தொடரின் முதல் போட்டி பார்ல் நகரில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடி 50 ஓவரில் 239-9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 86, ரியான் ரிக்கல்டன் 36, கேப்டன் ஐடன் மார்க்ரம் 35 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஆயுப் அசத்தல்:

பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக சல்மான் ஆகா 4, அப்ரார் அஹ்மத் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 240 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு சாய்ம் ஆயுப் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் அப்துல்லா சபிக் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த பாபர் அசாம் 23 ரன்களில் அவுட்டாகி பின்னடைவு ஏற்படுத்தினார்.

அதே போல மிடில் ஆர்டரில் கை கொடுக்க முயற்சித்த கேப்டன் முகமது ரிஸ்வான் 1, கம்ரான் குலாம் 4 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஆயுப் அரை சதத்தை அடித்து வெற்றிக்கு போராடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சல்மான் ஆகா மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடி அரை சதமடித்தார்.

- Advertisement -

பாகிஸ்தான் வெற்றி:

அவருடன் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆயுப் 99இல் இருந்த போது ரபாடாவுக்கு எதிராக சிக்சரை பறக்க விட்டு சதத்தை அடித்து 109 (119) விளாசி அவுட்டானார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மண்ணில் சேசிங் செய்த போட்டியில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். வெறும் 22 வருடம் 207 நாட்கள் வயதில் ஆயுப் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இதைமட்டும் பண்ண போதும் ரோஹித் சர்மா மீண்டும் பார்முக்கு வந்துடுவாரு – தினேஷ் கார்த்திக் கருத்து

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த இர்பான் கான் 1, ஷாஹீன் அப்ரிடி 0 ரன்களில் அவுட்டானதால் பாகிஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் மறுபுறம் தொடர்ந்து நிதானத்தை இழக்காமல் விளையாடிய சல்மான் 82* (90) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் 49.3 ஓவரில் 242-7 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பார்ட்னல் 2, ரபாடா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -