இந்தியா பாகிஸ்தான் நாட்டிற்கு வந்து விளையாடலனா இதுதான் நடக்கும் – பாக் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

Wasim
- Advertisement -

பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளுமா என்பது சந்தேகம் தான் ஏனெனில் கடந்த பல வருடங்களாக இந்திய அணி பாகிஸ்தான் சென்று எந்த ஒரு தொடரிலும் பங்கேற்பது இல்லை.

Pak-1

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அரசியல் ரீதியான உறவு மோசமானதை தொடர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இருநாட்டு அணிகளுக்கு இடையே எந்த ஒரு இருதரப்பு தொடர்களும் நடக்கவில்லை. நடுநிலையான நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த இந்த தொடரை கூட பிசிசிஐ ரத்து செய்தது.

- Advertisement -

இதனால் கடந்த 12 ஆண்டுகளாக எந்த ஒரு தொடரிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஆனால் இந்த தொடரில் பங்கேற்காது என்று தெரிகிறது.

Pakistan

மேலும் இந்த தொடர் குறித்து வெளிவந்த தகவலின்படி நிச்சயம் இந்தியா பங்கேற்க வாய்ப்பே இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாகி வாசிம்கான் இது குறித்து பேட்டி அளித்த போது : இந்தியா ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிற்கு வந்து பங்கேற்ற ஏற்காவிட்டால் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement