இவங்க எதுக்கு விளையாடுறாங்க ? நாங்க எதுக்கு பாக்கணும் ? வெறுத்துப்போன – பாக் ரசிகர்கள்

- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்து தற்போது 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாட திட்டமிடப்பட்டது. அதன் பிறகு பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி முதல் ஒரு நாள் போட்டியில் விளையாட இருந்த நிலையில் டாஸ் போடாமலேயே போட்டி ரத்து செய்யப்பட்டது.

Pak

- Advertisement -

2009ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 10 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள் நடக்கவே இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டி நடைபெறவிருந்த நிலையில் ஒருநாள் போட்டி ரத்தானது ரசிகர்களையும் மிக அதிகமாக பாதித்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியும் கனமழை காரணமாக இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்தப் போட்டி அறிவித்தபடி மீண்டும் துவங்கியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தற்போது வரை 37 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான விடயம் யாதெனில் ஏற்கனவே மழை காரணமாக முதல் போட்டி ரத்தானது அதன் பிறகு இரண்டாவது போட்டி மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

Pakistan-Fans

இந்த போட்டியை காண தனது ரசிகர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போய் விட்டது என்று தான் தோன்றுகிறது. ஏனெனில் மைதானத்தின் முக்கால்வாசி இடம் காலியாக இருப்பதை நாம் காண முடிகிறது. எனவே இதெல்லாம் ஒரு போட்டியாக காண வேண்டுமா என்பது போலவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement