ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவின் ஐந்தாவது போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின. தங்களது முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்றதால் செமி ஃபைனல் வாய்ப்பைத் தக்க வைக்க இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு 41 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பாபர் அசாம் 23 ரன்களில் பாண்டியா வேகத்தில் அவுட்டானார். மறுபுறம் தடுமாறிய இமாம் உல் ஹக் 10 ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் 47-2 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக முகமது ரிஸ்வான் – சவுத் ஷாக்கில் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.
மெதுவாக பாகிஸ்தான்:
விக்கெட்டை விடக்கூடாது என்ற நோக்கத்தில் மிகவும் மெதுவாக விளையாடிய அந்த ஜோடி வேகமாக ரன்கள் குவிக்கத் தவறியது. இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த அந்த ஜோடியில் கேப்டன் ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்த போது அக்சர் படேல் சுழலில் போல்ட்டானார்.
அடுத்த ஓவரிலேயே மறுபுறம் அரை சதம் அடித்து அசத்திய சௌத் ஷாக்கீல் 62 (76) ரன்களில் பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சல்மான் ஆகா 19, டாயப் தாஹிர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதற்கடுத்ததாக வந்த சாகின் அப்ரிடி 0, நாசிம் சா 14, ஹரிஷ் ரவூப் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்கள்.
அடக்கிய இந்தியா:
இறுதியில் குஷ்தில் ஷா போராடி 38 (39) ரன்கள் எடுத்தும் பாகிஸ்தானை 49.4 ஓவரில் 241 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு குல்தீப் யாதவ் 3, ஹர்திக் பாண்டியா 2, ராணா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னதாக துபாய் மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சேசிங் செய்த அணிகளே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 5 பவுண்டரியுடன் அதிரடி காட்டிய பாபர் அசாமை “பை பை” சொல்லி வழியனுப்பிய பாண்டியா – என்ன நடந்தது?
அது போன்ற நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்யாமல் அதைத் தவற விட்டு பேட்டிங்கிலும் சராசரியான ஸ்கோர் மட்டுமே எடுத்துள்ளது. இருப்பினும் துபாய் பிட்ச் இந்தத் தொடரில் இரண்டாவதாக பேட்டிங் செய்வதற்கு இன்னும் கடினமாக இருக்கிறது. எனவே பாகிஸ்தானை சராசரி ஸ்கோருக்குள் அடக்கிய இந்தியா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



