இங்கிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இந்த தவறே காரணம் – இன்சமாம் சாடல்

Inzamam
- Advertisement -

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது அந்நாட்டுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக புதிய அணி விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட புது வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது.

pak vs eng

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெரும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இந்த போட்டி மழையின் காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் முடிவில் 247 ரன்களை எடுக்க 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி இறுதியில் 195 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் தான் என்று முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போன்ற மிகப் பெரிய ஷாட்களை ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார்கள். ஸ்ட்ரைக் மாற்றி அவர்கள் விளையாடவில்லை.

babar

அவர்கள் செய்த இந்த தவறே ஒருநாள் போட்டிகளில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு காரணம். ஏனெனில் இந்த ஒருநாள் போட்டியில் 151 பந்துகளில் அவர்கள் ரன் அடிக்காமல் இருந்துள்ளனர். 50 ஓவர்கள் போட்டிகளில் எப்பொழுதும் அதிக பந்துகளை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வது அவசியம் ஆனால் 4 பந்துகளை வீணடித்து பின்னர் 5-வது பந்தை தூக்கி அடிக்கிறார்கள் இதுபோன்று செய்வது தவறு. பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக் மாற்றங்களை செய்து ரன்களை சேகரிக்க வேண்டும்.

Shakeel

ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து சிறிது நேரம் எடுத்துக் கொண்டால் ஆட்டம் நன்றாக அமையும். இல்லையெனில் இது போன்று 150 முதல் 190 ரன்கள் மட்டுமே தான் அடிக்க முடியும் என்று பேட்ஸ்மேன்களை சரமாரியாக விமர்சித்துள்ளார். புது பேட்ஸ்மேனான ஷகீல் சிறப்பாக விளையாடினார். நெருக்கடியான தருணத்தில் அவரது ஆட்டம் சிறப்பாக அமைந்தது என அவரை மட்டும் பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement