- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 உலககோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியால் பாகிஸ்தான் அணி சந்திக்கப்போகும் சிக்கல் – விவரம் இதோ

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் நமீபியா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் அணியும் இடம் பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியிடம் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் மோசமான தோல்வியை சந்தித்து இருந்தனர்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து வெளியேற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இவ்வேளையில் தற்போது மேலும் பாகிஸ்தான வீரர்கள் சந்திக்க இருக்கும் சிக்கல்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில முக்கிய உறுப்பினர்கள் பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை குறைக்க போவதாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் போட்டிக்கான கட்டணத்தையும் அவர்கள் குறைக்க இருப்பதாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த ஊதிய பட்டியலிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : உண்மையா அவர் தான் போட்டியை மாத்துனாரு.. ஐபிஎல் வாய்ப்பு தான் இதுக்கெல்லாம் காரணம்.. ஸ்டோய்னிஸ் பேட்டி

ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்குள் மூன்று பிரிவுகளில் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வரும் வேளையில் தற்போது மூன்று பிரிவுகளிலும் இருக்கும் வீரர்களை தரவரிசைப்படி மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தற்போது சம்பள சிக்கலை சந்திக்க இருப்பது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -