கொரோனாவால் பலியான முதல் கிரிக்கெட் வீரர். அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் – விவரம் இதோ

Cricket
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி நிறுத்திவிட்டு அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை கலங்கடித்த செய்துவருகிறது. அதுமட்டுமன்றி ஆசிய நாடுகளிலும் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பாதிப்பு உண்டாகி உள்ளது.

Corona-1

- Advertisement -

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு உண்டான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் பாலமாக கையாண்டு வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் காரணமாக 5716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 96 பேர் உயிர் இழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் பாகிஸ்தான் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் உயிரிழந்துள்ளார். 1988 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சபார் சர்பராஸ் பெஷாவரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Zafar

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்த முதல் கிரிக்கெட் வீரராக இவர் பார்க்கப்படுகிறார். இடது கை பேட்ஸ்மேனான இவர் 15 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 616 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 6 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் அவர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1994ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தான் அணிக்காக நான்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளது தற்போது பாகிஸ்தான் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement